famous actor vijayan mamooty death in heart attack

மலையாள முன்னணி நடிகர்களான மோகன் லால், திலீப் உள்ளிட்ட பல நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் விஜயன் மம்முட்டி, இவரை 50திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

எப்போதும், தன்னுடைய உடல் ஆரோக்கியம் மீது அதிக ஆர்வாம் காட்டும் இவர், எந்த நோய் நொடியும் இல்லாமல் மிகவும் ஆரோக்கியமாக இருந்தவர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து இவருடைய குடும்பத்தினர் இவரை மீட்டு உடனடியாக பிரபல மருத்துவ மனையில் சேர்த்தனர். 

நடிகர் விஜயன் மம்மூட்டியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இவர் ஏற்க்கனவே இறந்து விட்டதாக உறுதி செய்தனர். இவருக்கு சஞ்சலஷ்மி என்ற மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர். 

மேலும் இவருடைய மரணம் மலையாள திரையுலக பிரபலங்ககளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயன் குடும்பத்தினருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடந்து பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.