தமிழ் ரசிகைகளின் கனவு கண்ணனாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். தமிழில் மட்டுமின்றி இந்தி, ஆங்கிலம், மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார். 'அலைபாயுதே'  படத்தின் மூலம் தமிழில் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கியவர் நடிகர் மாதவன். இந்த படத்தின் வெற்றியை தொடந்து, 'என்னவளே', 'மின்னலே', 'டும் டும் டும்', 'ரன்' போன்ற பல காதல் படங்களில் நடித்து, பெண் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்.

மேலும் 'வேட்டை' படத்திற்கு பின் சில வருடங்கள் ஒரு சில காரணங்களால், தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த மாதவன், 'இறுதி சுற்று' படத்தின் மூலம் 2016 ஆம் ஆண்டு மாஸ் என்ட்ரி கொடுத்தார். இந்த படத்திற்கு பின், மிகவும் முதிர்ச்சியான வேடங்களையும்... கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையும் கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா', சூப்பர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது. தற்போது அனுஷ்காவுடன் “நிசாப்தம்” படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா பிரச்சனை காரணமாக அந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

ஓவராக அலட்டாமல் அசராமல் நடிக்கும் மாதவனுக்கு என்று கோலிவுட்டில் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. தற்போது லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு இல்லாததால் வீட்டில் மனைவி மற்றும் மகனுடன் பொழு போக்கி வருகிறார். லாக்டவுனில் பல பிரபலங்களைப் போலவே மாதவனும் சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக வலம் வருகிறார். ஃபேஸ் ஃபில்டர்  ஆப்பை பயன்படுத்தி தன்னை அவதார் ஹீரோ போல் மாற்றியுள்ள மாதவனின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...