கோலிவுட்டை தொடர்ந்து தற்போது பாலிவுட் பிரபலங்கள் பலரும் கரண்ட் பில்லுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.நடிகர் பிரசன்னா தனக்கு மூன்று மடங்கு கரண்ட் பில் வந்திருப்பதாக குரல் கொடுக்க, அதற்கு கூட தமிழ்நாடு மின்சாரவாரியம் விளக்கம் அளித்ததும் தனது கருத்தை வாபஸ்பெற்றுக்கொண்டு வருத்தம் தெரிவித்திருந்தார். இதையடுத்து நடிகைகள் விஜயலட்சுமி, கார்த்திகா நாயர் பலரும் தங்களுக்கு கரண்ட் பில் அதிகமாக வந்திருப்பதாக கொதித்தெழுந்தார். 

 

இதையும் படிங்க: நள்ளிரவில் நடிகர் விஜய் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார்... மோப்ப நாயுடன் திடீர் சோதனை....!

கடந்த 3 மாதமாக படப்பிடிப்புகள் அனைத்தும் இல்லாததால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். பலர் வீட்டில் இருந்த படியே வேலை செய்வதும் கரண்ட் பில் அதிகரிப்பிற்கு காரணமாக கூறப்படுகிறது. இருந்தாலும் மக்கள் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை. தங்களுக்கு வந்த கரண்ட் பில் ஸ்கிரீன் ஷார்ட்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து தாறுமாறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

 

இதையும் படிங்க: “விஷால் ஏமாற்றியதை ஆதாரத்துடன் வெளியிடுவேன்”... மோசடி புகாரில் சிக்கிய பெண் கணக்காளர் அதிரடி...!

தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாது இந்தியில் டாப்ஸி, ஹூமா குரோசி உள்ளிட்டோர் தங்களுக்கு அநியாயமாக கரண்ட் பில் வந்திருப்பதாக கூறி ட்விட்டரில் கொந்தளித்தனர். மும்பையில் வசிக்கும் பலரும் கரண்ட் பில் அதிகமாக வந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக அதானி எலக்ட்ரிசிட்டியை பயன்படுத்துவோருக்கு எக்கச்சக்கமாக பில் வந்துள்ளது. இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அர்ஷத் வர்ஷி தனக்கும் மின் கட்டணம் அதிகமாக வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

 

 

இதையும் படிங்க: ஒரே ஒரு போன் கால்.... வெளவெளத்து போன ரஜினிகாந்த்... இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவித்த கதை தெரியுமா?

அதானி நிறுவனம் மின் கட்டணமாக தனது வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 5674 ரூபாயை எடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் நான் பள்ளி நாட்களில் இருந்தே நன்றாக ஓவியம் வரைவேன் என்றும், லாக்டவுனில் ஓவியம் வரைய நிறைய நேரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மக்களே மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதால் எனது ஓவியங்களை வாங்கிக்கொள்ளுங்கள். அடுத்த மாத கட்டணத்தை செலுத்த எனது கிட்னிகளை தான் விற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.