famous actor neelakandan death

தமிழ் சினிமாவில் இயக்குனர் முக்தா சீனிவாசன் இயக்கதில், நடிகர் ஜெய் சங்கர் நடித்து 1969 ஆண்டு வெளிவந்த 'ஆயிரம் பொய்' படத்தில் காமெடி கதாப்பாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் நீலகண்டன் என்கிற நீலு.

நாடக நடிகராக அறியப்பட்டு, தமிழ் சினிமா உள்ளே நுழைந்த இவர், இதுவரை 7000திற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். அதே போல் 150 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பழம் பெரும் நடிகரான இவருடைய நடிப்பு அந்த கால ரசிகர்களை மட்டும் இன்றி, தற்போதைய ரசிகர்களையும் அந்நியன், தீனா, த்ரிஷா இல்ல நயன்தாரா, ஆகிய படங்கள் மூலம் வெகுவாக கவர்ந்தவை. 

இந்நிலையில், 82 வயதாகும் இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலமின்றி ஓய்வில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது திடீர் என இவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகியதைத் தொடர்ந்து மரணமடைந்துள்ளார். இந்த தகவல் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலர் இவருடைய குடும்பத்தினரை தொடர்புக் கொண்டு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.