'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசனை வைத்து அதிரடி ஆக்ஷன் மற்றும் அரசியல் சம்பந்தமான கதை களத்தை எடுக்க தயாராகியுள்ள லோகேஷ் கனகராஜ் படத்தில், இணைந்துள்ள புதிய நடிகர் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசனை வைத்து அதிரடி ஆக்ஷன் மற்றும் அரசியல் சம்பந்தமான கதை களத்தை எடுக்க தயாராகியுள்ள லோகேஷ் கனகராஜ் படத்தில், இணைந்துள்ள புதிய நடிகர் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுதியாகவே உள்ளது. இதற்க்கு முக்கிய காரணம், கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, வெறித்தனமாக வெளியான டீசர் என்றும் கூறலாம். அரசியலில் பிசியாக இருந்த கமல்ஹாசன், தன்னுடைய கட்சி... சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாததால், அரசியல் வேலைகளை, கவனித்து கொண்டே... திரைப்படத்திலும் தன்னுடைய கவனத்தை செலுத்த தயாராகியுள்ளார்.

எனவே கொரோனா இரண்டாவது அலை, தணிந்த பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள ‘விக்ரம்’ படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இடைப்பட்ட இந்த நேரத்தில், லோகேஷ் கனகராஜ் எழுதிய கதையிலும் சில மாற்றங்களை செய்ய கூறியுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து, 'விக்ரம்' படத்தில், நடிக்க உள்ள முக்கிய நடிகர் பற்றி விவரம் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே இந்த படத்தில் மலையாள நடிகரான பகத் பாசில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவரை தொடர்ந்து மற்றொரு மலையாள நடிகரான ஆண்டனி வர்கீஸ் இணைந்து இருப்பதாகவும் இவருக்கு ஒரு முக்கிய கேரக்டர் இந்த படத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஆண்டனி வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நிலையில் , அப்போது அவர் மலையாள படங்களில் படு பிசியாக இருந்ததால் இந்த வாய்ப்பு கை நழுவியது. மாஸ்டரில் விட்டாலும், 'விக்ரமை' மிஸ் செய்யவில்லை. இதுற்குறித்த அதிகார அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.