நடிகரும், அறிவியலாளருமான டேனி மாஸ்டர்சன் நடித்த தட் 70’ஸ் ஷோ என்ற தொலைக்காட்சி தொடர் அமெரிக்க மக்களிடம் மிகவும் புகழ்பெற்றது. 1998ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ஒளிபரப்பான அந்த தொடரில் ஸ்டீவன் ஹைட் என்ற கேரக்டரில் நடித்த டேனி மாஸ்டர்சன் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகனாக மாறினார். அமெரிக்காவில் ஏராளமான ரசிகைகள் பட்டாளத்தைக் கொண்ட டேனி மாஸ்டர்சன் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. 

 

இதையும் படிங்க: சுஷாந்த் தற்கொலையில் அதிரடி திருப்பம்: போலீசாரிடம் சிக்கிய 5 டைரிகள்...அச்சத்தின் உச்சத்தில் பாலிவுட் ஸ்டார்ஸ்...!

தங்களை டேனி மாஸ்டர்சன் பாலியல் வன்கொடுமை செய்ததாக 2017ம் ஆண்டு 4 பெண்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் 2001 முதல் 2003 வரையிலான ஆண்டுகளில் ஹாலிவுட் ஹில்ஸிஸ் உள்ள டேனி வீட்டில் பணியாற்றிய 3 பெண்களை அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உறுதி செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து தனது தி ரேன்ச் என்ற தொடரிலிருந்து டேனி மாஸ்டர்சனை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் நீக்கியது. 

 

இதையும் படிங்க:  “இனி இவருக்கு பதில் இவர்”.... சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலில் அதிரடி மாற்றம்...!

இந்த குற்றச்சாட்டுகளால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான டேனி மாஸ்டர்சனும், அவரது மனைவியும் அனைத்தையும் பொய் என மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த வழக்கில் டேனி மாஸ்டர்சன் மீது கூறப்பட்ட புகார்கள் அனைத்தும் உண்மை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிமன்றம் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதற்காக மாஸ்டர்சனுக்கு கிட்டதட்ட 45 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும் என கூறப்படுகிறது.