பல பெங்காலி மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் பழம்பெரும் நடிகர் சின்மோய் ராய். 78 வயதாகும் இவர் தற்போது வயது மூப்பு காரணத்தால் தன்னுடைய மகனுடன் கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று வேலை விஷயமாக இவருடைய மகன் வெளியில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. வீட்டில் யாரும் இல்லாத போது இவர் பால்கெனி பகுதிக்கு வந்து நின்றுள்ளார். 

அப்போது தலை சுற்றல் ஏற்பட்டு இவர் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. பின் அந்த அப்பார்ட்மென்ட்டில் இருந்தவர்கள் இவரை உடனடியாக மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

இவருக்கு கை, கால். மற்றும் உடல் பகுதியில் அதிக காயங்கள் ஏற்பட்டுள்ளதால் மோசமான நிலையில் உள்ளதாகவும் தொடர்ந்து சிகிச்சை கொடுத்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து பொலிசாரும் விசாரணை செய்து வருகிறார்கள்.