இந்தி படங்கள் மற்றும் சீரியல்களில் கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் அனுபம் ஷ்யாம். பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது மும்பையில் வசித்து வரும் இவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: கோடிகளை கொட்டிக் கொடுக்க வந்த தயாரிப்பாளர்... தெருக்கோடி வரை விரட்டி விட்ட சாய் பல்லவி...!

இதனால் மலத் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டயாலிசிஸ் நடந்து கொண்டிருந்தபோது அனுபமின் நிலைமை மோசமானதால் குர்காவ்னில் இருக்கும் லைஃப்லைன் மருத்துவமனைக்கு அனுபமை மாற்றியுள்ளார்கள். இதுகுறித்து அனுபம் சகோதரர் கூறியதாவது, அனுபம்  தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். நிதி பிரச்சனையால் அவருக்கு சிகிச்சை கிடைப்பதில் சிக்கல் உள்ளது. 

 

இதையும் படிங்க: மருத்துவ செலவிற்கு உதவி கேட்ட பொன்னம்பலம்... மருத்துவமனைக்கே பணம் அனுப்பி வைத்த தல அஜித்...!

மேலும் பீயிங் ஹ்யூமன் இணையதளம் மூலம் சல்மான் கானிடம் உதவி கேட்டுள்ளேன். பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் எனக்கு போன் செய்து உதவி செய்வதாக கூறினார் என்றார். கொரோனா பிரச்சனை காரணமாக சின்னத்திரை, சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பணம் இல்லாமல் திரைத்துறை கலைஞர்கள் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளாக நீரழிவு நோயுடன் போராடி வரும் அனுபம் பய்யாவுக்கு உதவும் படி அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.