Asianet News TamilAsianet News Tamil

மாரடைப்பால் பிரபல நடிகை மருத்துவ மனையில் அனுமதி...!

famous actor admitted in hospital for heart attack
famous actor admitted in hospital for heart attack
Author
First Published Mar 26, 2018, 6:29 PM IST


கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி கமலகுமாரி, திடீர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தற்போது 76 வயதாகும் இவர், தன்னுடைய 18 வயதில் சினிமா வாழக்கையை துவங்கியவர். நடிகையாக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும், பின்னணி பாடகியாகவும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியவர்.

 famous actor admitted in hospital for heart attack

தமிழில் நடித்த ஜெயந்தி:

கன்னட மொழியில் 300 க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் 'மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்' என்ற படத்தில் 1963 ஆம் ஆண்டு அறிமுகமானார். இதை தொடர்து 'இருவர் உள்ளம்', 'அன்னை இல்லம்', 'படகோட்டி', 'கர்ணன்', 'கலை கோவில்', 'எதிர் நீச்சல்' என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். famous actor admitted in hospital for heart attack

குறிப்பாக தமிழில் கொடிகட்டி பரந்த பிரபல நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்து ராமன், நாகேஷ், ஜெயசங்கர் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். 

விருது:

famous actor admitted in hospital for heart attack

இவர் சிறந்த நடிகை மற்றும் துணை நடிகைக்கான கர்நாடக மாநில அரசின் தேசிய விருதையும், பிலிம் ஃபேர் விருதையும் பல முறை பெற்றுள்ளார். 

திருமணம்:

இவர் முதலில் அறிமுகமான கன்னடப்படம் 'ஜீனு கூடு' இந்தப் படத்தை இயக்கிய சிவராமையே திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு கிருஷ்ணா குமார் என்கிற மகனும் ஒரு மகளும் உள்ளனர். famous actor admitted in hospital for heart attack

தற்போது பெங்களூரில் வழந்து வரும் இவருக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் இவருக்கு ஆஸ்துமா தொற்று இருக்கலாம் என்று கூறியுள்ளதாகவும். மூச்சி திணறல் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். 


 

Follow Us:
Download App:
  • android
  • ios