பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து  மீது கொடுத்துள்ள, பாலியல் புகார் தான் இரண்டு வாரங்களை கடந்தும் கோலிவுட் வட்டாரத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.  சின்மயிக்கு ஆதரவாக ஒருசிலர் குரல் கொடுத்தாலும் சிலர் இவருக்கு எதிராக பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். 

ஆனால் சின்மயி தனக்கு ஆதரவு கொடுப்பவர்களை வரவேற்பதாக கூறி கொண்டு, தன்னை எதிர்த்து கேள்வி கேட்பவர்களுக்கு எந்த பதிலும் சரி வர கூறாமல் இருக்கிறார். 

கடந்த வாரம் இது குறித்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூட, சின்மயி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திகைத்து போய் நின்றார். மேலும் கை எடுத்து கும்பிட்டு தன்னிடம் ஆதாரம் இல்லை, வெளிநாட்டில் நடைபெற்ற விழாவில் தான் கலந்து கொண்டதற்கான ஒரே ஆதாரம் அந்த பாஸ்போர்ட் அது தற்போது தொலைந்து விட்டது என்றும் அதனை தேடிக்கொண்டு இருப்பதாகவும், கையில் கிடைத்தவுடன் தான் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல நடிகர் ஜி.மாரிமுத்து சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், வைரமுத்து ஒரு ஆம்பிளை. அவர் ஒரு பெண்ணை படுக்கைக்கு அழைத்ததில் தவறு என்ன இருக்கிறது? அவர் ஒரு ஆணை அழைத்திருந்தால் தான் அது தவறு. என வெளிப்படையாக ஒரு சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

விருப்பமுள்ளவர்கள் படுக்கைக்கு வருவார்கள். விருப்பம் இல்லாதவர்கள் இதுபோல் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பார்கள். ஆனால் இந்த பாலியல் புகார் விவகாரத்தில், வைரமுத்துவின் புகழுக்கு சிறிதளவு கூட இழுக்கு வரவாய்ப்பில்லை.

வைரமுத்துவின் விவகாரம் இன்றும் சில நாட்களில் மறக்கடிக்கப்பட்டுவிடும் என்பதுதான் உண்மை என கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து சர்ச்சையாக பார்க்கப்பட்டாலும், ஒரு சிலர் இவரின் கருத்து உண்மை என்பது போல் கூறி வருகிறார்கள், மற்ற சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.