பாலியல் தொல்லை கொடுத்த இயக்குனர், டாக்டர், இன்ஸ்பெக்டர்... 14 நபர்கள் பெயரை வெளியிட்ட நடிகை..!
மீடூ விவகாரம் குறித்த புகார்கள் அவ்வப்போது திரையுலகத்தில் உள்ள வரும் நிலையில், பிரபல நடிகர் ஒருவர் லிஸ்ட் போட்டு தனக்கு பாலியல் தொந்தரவு செய்தவர்கள் பெயரை வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீடூ விவகாரம் குறித்த புகார்கள் அவ்வப்போது திரையுலகத்தில் உள்ள வரும் நிலையில், பிரபல நடிகர் ஒருவர் லிஸ்ட் போட்டு தனக்கு பாலியல் தொந்தரவு செய்தவர்கள் பெயரை வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு விஸ்வரூபம் எடுத்து, திரைத்துறையில் பல இயக்குநர்கள், நடிகர்களின் தூக்கத்தை கெடுத்தது மீடூ விவகாரம். ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்து திரைத்துறையைச் சேர்ந்த பல முன்னணி மற்றும் இளம் நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர். இதனால் பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைத்த திரைப்பிரபலங்கள் பலரது முகத்திரை கிழிக்கப்பட்டது.
படவாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டது குறித்தும், கட்டாயப்படுத்தப்பட்டது குறித்தும் பல நடிகைகள் தற்போது பொது வெளியில் தைரியமாக பேசி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது பிரபல மலையை நடிகையும், சமூக ஆர்வலருமான ரேவதி சம்பத்... தன்னை உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் துன்புறுத்திய 14 நபர்களின் பெயர் மற்றும் அவர்கள் தொழில் உட்பட அனைத்தையும், லிஸ்ட் போட்டு வெளியிட்டுள்ளார்.
ராஜேஷ் தொச்சிவர் (இயக்குனர்), சித்திக் (நடிகர்), ஆஷிக் மஹி (ஒளிப்பதிவாளர்), சிஜூ (நடிகர்), அம்ஹில் தேவ் (கேரள பேஷன் லீக் நிறுவனர்), அஜய் பிரபாகர் (டாக்டர்), எம்.எஸ்.பதுஷ், சவுரப் கிருஷ்ணன், நந்து அசோகன், மேக்ஸ்வெல் ஜோஸ் (குறும்பட இயக்குனர்), ஷனூப் கர்வத் (விளம்பரப்பட இயக்குனர்), ரஹீந்த் பாய் (காஸ்டிங் இயக்குனர்), சருன் லியோ (வங்கி ஏஜென்ட்), பினு (இன்ஸ்பெக்டர்) ஆகியோர் தான்.
இந்தப் பட்டியலில் உள்ள நந்து அசோகனும், எம்.எஸ்.பதுஹும் என்னை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என ரேவதி கூறியுள்ளார்.
சவுரப் கிருஷ்ணன் இணையத்தில் தன்னை கேலி செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.