familiaranchor driven with full drunk in chenai
சென்னை பாரிமுனையில் பிரபல டிவி தொகுப்பாளர் நிவேதிதா மது போதையில் அட்டகாசம்...!!!!
சென்னை, பாரிமுனையில், 11 வயது சிறுவனுடன் ஒருவர் காரில் வந்தபோது சிக்னலில் நின்றுள்ளார். அப்போது பின்புறம் வந்த கார் ஒன்று வேகமாக மோதியுள்ளது. சிறுவனுடன் வந்தவர்கள் கீழே இறங்கி காருக்கு ஆயிற்று என்று பார்த்துவிட்டு மோதியவர்களை கேள்வி கேட்டனர்.
அதற்கு காரில் இருந்த பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி நிவேதிதா மற்றும் அவரது தோழி மது போதையில் நாங்கள் அப்படித்தான் இடிப்போம் இப்ப அதுக்கு என்ன என்று திமிராக கூறினார்களாம்.
மேலும், காரை இடித்தது மட்டுமல்லாமல் சிறுவனுடன் வந்தவர்களை ஆங்கிலத்தில் ஆபாசமாக திட்டியும் உள்ளனர்.
அதேவேளையில் அருகில் இருந்தவர்கள் கார் விபத்தை பார்த்துவிட்டு சூழ்ந்துகொண்டனர். காரின் உள்ளே பார்த்ததும் அவர்கள் டிவி புகழ் என்பதால் சடுதியில் கூட்டம் கூடிவிட்டது.
காரை நிறைய ஆண்கள் சூழ்ந்ததால் குடி போதையிலும் தங்களது பாதுகாப்பு கருதி அந்த இரண்டு பெண்களும் காருக்குள்ளேயே இருந்துள்ளனர்.
இதை அனைத்தையும் காரை சுற்றி கூட்டம்போட்ட ஆண்கள் வீடியோ எடுத்துள்ளனர். காருக்குள் இருந்த தொகுப்பாளினி நிவேதிதா யாருக்கோ ஃபோன் செய்வதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
பெண்கள் இருவரையும் காரை விட்டு இறங்கிவருமாறு சுற்றி இருந்த ஆண்கள் வலியுறுத்திய போதும் இறுதிவரை அவர்கள் பயத்தில் காரைவிட்டு இறங்கி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டும் ஆண்களை தேடி தேடி தன் கடமையை செய்யும் காவல்துறை இந்தப் பெண்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
