“ HERO “ ஆனார் நந்தன் ராம்......பிரபல இசையமைப்பாளரின் வாரிசு.....!

உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி , நாட்டாமை உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசை அமைத்தவர், இசையமைப்பாளர் சிற்பி.

நாட்டமை படத்திலிருந்து கொட்டாப் பாக்கு பாடலும் மற்றும் வெல்வெட்டா வெல்வெட்டா, அழகிய லைலா உள்ளிட்ட பட பாடல்களுக்கு இசை அமைத்தவர் இசையமைப்பாளர் சிற்பி என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மகன் நந்தன்ராம். இவர் “பள்ளி பருவத்திலே” என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுமாகிறார் .

தற்போது படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. இந்த படமானது தஞ்சை மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. பள்ளி பருவத்தில் நடக்கக்கூடிய பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இதில் இடம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஹீரோவாக அறிமுகமாகும் நந்தன்ராம் “பள்ளி பருவத்திலே “ என்ற டைட்டலுக்கு ஏற்ப , பள்ளியில் பயிலும் மாணவன் போலவே தோற்றமளிக்கிறார் .கதைக்கு ஏற்ற கதாபாத்திரமாகவும் நந்தன்ராம் உள்ளார்.

மேலும், இந்த படத்தை பொறுத்தவரை பல பிரபலங்கள், முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதால் மேலும் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது. குறிப்பாக , கே.எஸ் . ரவிக்குமார் , ஊர்வசி மற்றும் தம்பி ராமையா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் இத்திரைப்படத்தில் நடிக்கிறார்கள்.

கற்றது தமிழ் என்ற திரைபடத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான வெண்பா, நந்தன்ராமுக்கு ஜோடியாக நடிக்கிறார் .