familiar actor kalasaala babau died in kerala
பிரபல மலையாள இயக்குனரும், நடிகருமான கலாசால பாபு இன்று உடல்நலக்குறைவு காரணமாக எர்ணாகுளத்தில் உயிரிழந்தார்.
சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர், தொடர் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக இன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அப்போது ஏற்பட்ட திடீர் வலிப்பு காரணமாக எதிர்பாரதவிதமாக உயிர் இழந்துள்ளார்
இவர், 1977ம் ஆண்டு வெளியான "இணையே தேடி" என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர்.
இவர் நடிப்போடு, பல படங்களை இயக்கியும் உள்ளார். பல படங்களில் வில்லனாக, குணசித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.
படங்களை தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த இவர் உடல்நலக் குறைவு காரணமாக எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.
இவரது இறப்பு செய்தியை கேட்டு கேரள திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், தொடர்ந்து பல நடிகை நடிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
