கமலுடன் பூஜா குமார் புகைப்படம் எடுத்துக் கொண்டதால் கூகுள் தேடுதலில் ஒரே நாளில் பல லட்சம் பேர் தேடும் பிரபல நடிகையாகி விட்டார். இந்நிலையில் கமல்ஹாசன் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘கமல் சார் கூட தொடர்ந்து 5 வருஷமா நடிக்கிறேன். அவர் மிகச் சிறந்த நடிகர் மட்டும் இல்லை, எல்லாவகையிலும் ஒரு உதாரண மனிதர். முக்கியமா, அவரோட தொழில் பக்தி மெய்சிலிர்க்க வைக்கும். ராஜ் கமல் நிறுவனம் எனக்கு சென்னையில் இன்னொரு வீடு மாதிரி. கமலைப் போல ஒரு கடுமையான உழைப்பாளியை பார்க்கிறது கஷ்டம். பண்முகத் திறனாளி அவர். 

ஒரே சமயத்துல பல வேலைகளை செய்யறது கூட பெரிசு இல்லை. அதுல அத்தனையிலும் சிறப்பா அவர் செய்பவர். அரசியல், சினிமா, டிவி ஷோ இப்படி ஒரே சமயத்துல பெரிய விஷயங்களில் இறங்கி எல்லாத்துலயும் திறமையுடன் கையாள்வது சாதாரண விஷயமா என்ன? எனக்கு ஆச்சரியமாகவும் மலைப்பாகவும் இருக்கும்.

பொறுமையா இருக்கறதுக்கு எப்படின்னு எனக்குக் கத்துக் கொடுத்தவர் கமல் சார்தான். எந்தத் தடை வந்தாலும் அதை எதிர்த்து போராட்டக் குணத்தோட செயல்படுவார். சினிமா மேல கமல் சாருக்கு மிகப் பெரிய காதல். நான் கண்கூடா பல சமயம் அதைப் பார்த்திருக்கேன். புதுசா யோசிச்சு புதுப்புது ஐடியாக்களை உருவாக்குவார். சின்ன விஷயத்துக்குக் கூட மிகத் தீவிர மெனக்கெடல் அவர்கிட்ட இருக்கும். எதைப் பத்தியும் பயப்படாம ரிஸ்க் எடுப்பார். ரசிகர்களுக்குப் பிடிக்கும்படியா படம் நேர்த்தியா வரணும் அது ஒண்ணுதான் அவரோட குறிக்கோளா இருக்கும்.

 

இப்ப அரசியல் ஈடுபாட்டிருந்தாலும் முழு மூச்சா அதுக்காக கடுமையா உழைக்கறார். கமல் சாருக்கு இறை நம்பிக்கை இல்லை. ஆனால், இறைவனோட பரிபூர்ண அருள் அவருக்கு இருக்கு. என்னைப் பொருத்தவரையில் கமல் ஒரு மேஜிக் மேன்’’என புல்லரிக்கிறார் பூஜா குமார்.