எதிர்நீச்சல் சீரியல் நாயகன்  சக்தி மற்றும் ஜனனி இருவரும், ரீல்ஸில் ரொமான்ஸ் பண்ணும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

சன் டிவி தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர், 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலில் ஆணாதிக்கத்துக்கு எதிராக குரல் எழுப்பி வரும் பெண்ணாக... முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஜனனி. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜனனி குணசேகரனின் தம்பியான, சக்தியை திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு வந்ததில் இருந்து கணவர் சக்தியுடன் சந்தோஷமாக சிரித்து பேசியதை விட, அழுது கொண்டு பேசியதும்... சண்டை போட்ட காட்சிகளும் தான் அதிகம். பல வருடங்களாக அண்ணன் சொல்வதையே வேதவாக்காக நினைத்த குணசேகரனின் தம்பிகள், இப்போது தான் எதார்த்தத்தை புரிந்து கொண்டு குணசேகரனுக்கு எதிராக குரல் உயர்த்த துவங்கி உள்ளனர்.

6 நாட்களாக வெண்டிலேட்டர் சிகிச்சையில் நடிகை அருந்ததி நாயர்! பணம் இல்லாமல் தவிக்கும் குடும்பம்! தற்போதைய நிலை!

எனவே இந்த சீரியல், கடந்த மாதம் சற்று டல் அடித்த நிலையில்... இந்த மாதம் அடித்து பிடித்து TRP-யில் முன்னுக்கு வர துவங்கியுள்ளது. ஜனனியும் - சக்தியும் குடும்ப பிரச்சனை ஒருபுறம் இருந்தாலும்... தொடர்ந்து தொழிலில் சாதிக்க முயன்று வருகிறார்கள். சீரியலில் எப்போதும் சீரியஸாக பேசிக்கொண்டு இருக்கும் ஜனனி, சக்தியுடன் ரீல்ஸில் ரொமான்ஸ் செய்துள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

View post on Instagram