பொங்கல் சிறப்பாக சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்திலிருந்து முக்கிய அப்டேட் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான சூர்யாவின் ஜெய் பீம் நல்ல வெற்றியை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படம் 'எதற்கும் துணிந்தவன்'. வரிசையாக ரஜினியின் அண்ணாத்த, விஜயின் பீஸ்ட் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பை தன் கையிலெடுத்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தையும் தயாரித்து வருகிறது. இதற்கு இசையமைப்பாளராக இமான் பணிபுரிந்து வருகிறார். சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மண் மனம் மாறாத கிராமத்து கதைகளை நகைச்சுவை தளும்ப கொடுக்கும் பாண்டிராஜனின் புதிய படைப்பான "எதற்கும் துணிந்தவன்" ஆக்சன் கலவையாக உருவாகிறது என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதோடு திரையரங்கு திருவிழாவாக இந்த படம் இருக்கும் என சமீபத்தில் நடிகர் சூரி தெரிவித்திருந்தார்.

ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் பொங்கல் சிறப்பாக இந்த படத்திலிருந்து ட்ரைலர் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வருகிறது.. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.