2017ம் ஆண்டு முதல் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "தேவதையைக் கண்டேன்" சீரியலில், ஈஸ்வர், ஹிருத்திகா ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க, மகாலட்சுமி வில்லியாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் நடித்த போது தான் தனது கணவர் ஈஸ்வருக்கும், மகாலட்சுமிக்கும் இடையே தவறான தொடர்பு ஏற்பட்டதாக கூறி, அவரது மனைவி ஜெயஸ்ரீ பரபரப்பு புகார் ஒன்றை கூறினார்.

இந்த குற்றச்சாட்டை அடுத்து கைது செய்யப்பட்ட ஈஸ்வர், தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார். சிந்துபாத் கதை போல ஈஸ்வர், ஜெயஸ்ரீ, மகாலட்சுமி இடையேயான பிரச்சனை நீண்டு கொண்டே செல்கிறது. ஒருவர் மீது ஒருவர் மாறி, மாறி குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகின்றனர். எனது மகளிடம் தவறாக நடந்துகொள்ள முடிவு செய்தார், குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்தினார் என கடந்த சில வாரங்களாக ஈஸ்வர் மீது ஜெயஸ்ரீ அடுக்கி வந்த புகார்கள் அவரது இமேஜை முற்றிலும் டெமேஜ் செய்துவிட்டதாம். 

ஈஸ்வர் ஜெயலுக்குப் போன போது கூட சீரியலில் எந்த வித சிக்கலும் இல்லாமல் தான் இருந்ததாம். மேலும் ஈஸ்வரும், மகாலட்சுமியும் ஒன்றாக நடிக்கவும் செய்தார்களாம். ஆனால் இவர்களது கள்ளக்காதல் விவகாரம் தற்போது ஊர் அறிந்த செய்தியாகிவிட்டது. அதனால் மக்கள் மனதில் சீரியல் குறித்து தவறான எண்ணம் உருவாகிவிட்டதாக கூறப்படுகிறது. எனவே "தேவதையைக் கண்டேன்" சீரியலை சீக்கிரமாக முடிக்க தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.