சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று அதிகாலை வெளியான 'காலா' படத்தின் டீசர் இணைய தளங்களில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகள், வசனங்கள், இசை, மற்றும் பாடல் வரிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. 

ஈஸ்வரி:

'காலா' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளவர் நடிகை ஈஸ்வரிராவ்...  அழகான முகம், நடிக்கும் திறமை இருந்தும் இது நாள் வரை கவனிக்கப்படாத நடிகையாகவே இருந்தார். 

இவரை தேடிப் பிடித்து நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித். இவர் ஏற்கனவே ரஜினிகாந்தை வைத்து இயக்கிய 'கபாலி'  படத்தில் கூட தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகாத பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தேவை நடிக்க வைத்திருந்தார். அதே பாணியை இந்த படத்திலும் கடைப்பிடித்துள்ளார் ரஞ்சித்.

விஜய் நாயகி:

தற்போது ரஜினிக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்து வரும் ஈஸ்வரிராவ் நடிகர் விஜய் நடித்த முதல் படமான 'நாளைய தீர்ப்பு' படத்தில் வினுசக்கரவர்த்தியின் மகளாக ராணி என்கிற காதாப்பாத்திரத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடித்த படங்கள்:

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலுமகேந்திராவின் 'ராமன் அப்துல்லா' பிரகாஷ் ராஜ் நடித்த குருப்பார்வை, சிம்மராசி, சுள்ளான் உள்ளிட்ட 10க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் பிரஷாந்த் மற்றும் சிநேகா நடித்த விரும்புகிறேன் படத்திற்காக சிறந்த குணசித்திர நடிகை என்கிற விருதையும் பெற்றார்.

கண்டுகொள்ள படாத நடிகை;

தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் இவர் நடித்திருந்தாலும் இதுவரை அதிகம் கண்டுக்கொள்ளப் படாத நடிகையாவே இருந்து வந்தார் ஆனால் 'காலா' படத்திற்கு பின் ஈஸ்வரி ராவ் நடிப்பிற்க்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.