1996ம் ஆண்டு ஆரூர் தமிழ் நாடன் என்பவர் எழுதிய ஜுகிபா கதை, தித்திக் தீபிகா என்ற பெயரில் கடந்த 2007 ஆம் ஆண்டு நாவலாக வெளியானது. இந்த நாவல் வெளியாகி சரியாக மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கிய எந்திரன் படம் வெளியானது. ஆனால் எந்திரன் படத்தின் கதை தன்னுடைய ஜுகிபா கதையை ஒத்துள்ளதாக எந்திரன் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அவர்கள் தரப்பில் எந்த ஒரு பதிலும் வராத நிலையில் 1996 ஆம் ஆண்டு தான் எழுதிய கதையை திருடி 'எந்திரன்' எனும் படத்தை எடுத்துவிட்டு கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாகவும், இது காப்புரிமை சட்டத்தின்படி கிரிமினல் குற்றம். எனவே இந்த வழக்கில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என எழும்பூர் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் ஆகியோரை நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதனிடையே ஷங்கர் தரப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கு சட்டப்படி செல்லாது என்றும், கதை திருட்டு விவகாரத்தில் ஈடுபடவில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை எழும்பூர் கீழமை நீதிமன்றம் விசாரிக்க தடை விதித்தது. 

 
மேலும் இந்த வழக்கின் விசாரனை சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.இதனிடையே இந்த வழக்கில் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், ஆரூர் நாடன் கலாநிதிமாறன் மீது தொடர்ந்த வழக்கு செல்லாது என அறிவித்தது. இருப்பினும் இயக்குனர் ஷங்கர் மீது காப்புரிமை சட்டத்தின் கீழ் நடத்த முகாந்திரம் உள்ளது. கதை ஒரே மாதிரி உள்ளதால் காப்புரிமை மீறலுக்கு வாய்ப்புள்ளதாக கூறி இது தொடர்பான வழக்கை மட்டும் கீழமை நீதிமன்றம் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

 

இதையும் படிங்க: சொக்க வைக்கும் குட்டி சிரிப்பு... அழகு மகள் ஐலாவின் போட்டோக்களை வெளியிட்ட ஆல்யா மானசா...!

உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், எந்திரன் திரைப்பட கதை திருட்டு புகார் தொடர்பான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்ககோரி ஷங்கர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.