english news papper quoted issues about ilaiyaraja cast

.

தலித் என்பதால் பத்ம விபூஷன்

பிரபல ஆங்கில நாளேடான நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள கட்டுரையில், இளையராஜா தலித் என்பதால் அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்ம விருதுகள் அறிவிப்பு குடியரசு தினத்துக்கான 2018 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இசைஞானி இளையராஜா, இந்துத்துவா அபிமானி பரமேஸ்வரன், பாடகர் குலாம் முஸ்தபா கான் ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் உள்நோக்கம்

இந்நிலையில் இதுகுறித்து பிரபல ஆங்கில நாளேடான நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சர்ச்சைக்குரிய கட்டுரையை வெளியிட்டுள்ளது.அதில் பத்ம விருதுகள் வழங்குவதில் எப்போதுமே அரசியல் நோக்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ள விருதுகளில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக நாட்டின் உயரிய விருதுகளில் இரண்டாவது விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்படுவதில் அரசியல் உள்நோக்கம் தெளிவாக தெரிவதாக அறிவித்துள்ளனர்.

தலித்துகளுக்கு அங்கீகாரம்

மேலும் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக ஜிக்னேஷ் மேவானி போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் தலித் வகுப்பை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு விருது வழங்கியிருப்பதன் மூலம் தலித்துகளுக்கு அங்கீகாரம் அளிப்பதாக காட்டிக் கொள்கிறது.
மேலும் சிறுபான்மையினரை திருப்திபடுத்த குலாம் முஸ்தபா கான் மற்றும் இந்துத்துவாக்களை திருப்திபடுத்த பரமேஸ்வரன் ஆகியோர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் என அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எழும் கண்டனம்

இசைஞானி இளையராஜாவின் இசைப்புரட்சி இன்றியமையாதது.இவர் "பஞ்சமுகி" என்ற கர்நாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கியுள்ளார். "நத்திங் பட் வின்ட்" போன்ற எண்ணற்ற ஆல்பங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் இசையால் கட்டி வைத்திருப்பவர். அவரை தலித் என்ற அடையாளத்துக்குள் வைப்பது கண்டித்தக்கது என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.