நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் கடந்த வாரம் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். 

நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் கடந்த வாரம் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இவர்களுடைய திருமணம் ஹைதராபாத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. இவர்களுடைய திருமணத்திற்கு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அழைப்பு விடுக்கப்பட்ட பிரபலங்கள் சிலர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

திருமணத்தை தொடர்ந்து கடந்த ஓரிரு தினத்திற்கு முன் பத்திரிக்கை துறையை சேர்ந்தவர்களுக்கு என சிறப்பு வரவேற்பு ஒன்றையும் நடத்தினார் ஆர்யா. 

இந்நிலையில் ஆர்யா திருமணத்திற்காக பெண் தேடிய நிகழ்ச்சியில், கலந்துகொண்டு, இறுதிவரை வந்த பிரபல மாடல் சீதாலட்சுமி ஆர்யாவின் இந்த திருமணம் குறித்து தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது ஆர்யா, நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார் என்பதைக்கூட வலைதளங்கள் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். அவர் எங்களுக்காவது, நேரடியாகவோ அல்லது போன் செய்தோ சொல்லியிருக்கலாம். 

ஆனால் தற்போது வரை பர்சனலாகவும்,ப்ரொபெஷ்னலாகவும், நெருக்கமான தொடர்பில் தான் இருக்கிறோம். அவர் எங்களுக்கு கூட சொல்லாதது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என கூறியுள்ளார்.