இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதாகவும், இந்த படம் சென்சாருக்கு சென்றுள்ளதாகவும் நேற்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் சென்றால் சான்றிதழ் குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.  இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படத்தின் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கவுதம் மேனன் இயக்கத்தில் தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மேகா ஆகாஷ் - சிம்புவுடன் நடித்து வெளியான, 'வந்த ராஜாவைத்தான் வருவேன்' படம் தோல்வியடைந்த நிலையில் இந்த படம் இவருக்கு கை கொடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.