இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில், ஐசரி கணேஷ் மற்றும் கௌதம் மேனன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'.  இந்த படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் மேகாஆகாஷ், சசிகுமார், சுனைனா, ராணா டகுபதி, உள்ளிட்ட பலர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள், கடந்த 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. திரைப்படத்தின் கதை மற்றும் சூட்டிங் இரண்டு மாதங்கள் மட்டுமே நடந்த நிலையில், ஒரு சில காரணங்களால் இப்படம் நிறுத்திவைக்கப்பட்டது.

பின் பல்வேறு பிரச்சனைகளை கடந்து இந்தப்படத்தின் ஷூட்டிங் முழுவதையும் முடித்தார் கௌதம் மேனன். எனினும் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக,  பல ரிலீஸ் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸ் தள்ளிபோடப்பட்டது.

இந்நிலையில் தற்போது அனைத்து பிரச்சினைகளும் முடிவடைந்து, நவம்பர் 29ஆம் தேதி, இப்படம் ரிலீஸாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த தேதியில் ஆவது 'எனை நோக்கி பாயும் தோட்டா' ரிலீசாகுமா என ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருந்த நிலையில், இன்று முதல் ரிசர்வ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் ரசிகர்கள் உற்சாகமாக ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்து வருகின்றனர்