பிறந்தநாளில் கவுண்டமணி போட்ட நச் ட்விட்..! கடுமையான நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை!

தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்களுக்கு எடுத்து காட்டாக உள்ளவர் காமெடி கிங் கவுண்டமணி. இவர் நேற்று தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு, ட்விட்டர் பக்கத்தில் நச்சென்று ஒரு ட்விட் போட்டுள்ளார். இந்த பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 
emotinal tweet posted by comedy actor Goundamani on his birthday

மேலும் செய்திகள்: அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... கொரோனாவால் உயிர்விட்ட நடிகர்..! கோலிவுட் திரையுலகின் அடுத்த இழப்பு!
 
தமிழ் திரையுலகில் காமெடி நடிகர்களாக பலர் வந்தாலும், ஜாம்பவன் என்ற பட்டம் சிலருக்கு மட்டுமே பொருந்தும். அதில் முக்கியமானவர் 90களில் தமிழ் சினிமாவை தன்னுடைய காமெடியால் ஆட்சி செய்தவர் கவுண்டமணி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், புரட்சித் தமிழன் சத்யராஜ் என படத்தின் நாயகர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் படத்தில் காமெடி நாயகனாக கண்டிப்பாக கவுண்டமனி இருப்பார். 

emotinal tweet posted by comedy actor Goundamani on his birthday

குறிப்பாக 90களில் கவுண்டமணி - செந்தில் காம்பினேஷன் இல்லாத படங்களை பார்ப்பது என்பதே அரிது. இவர்களது இவரது காம்பினேஷன் தான் வேண்டும் என, ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் கொடுத்து இவர்களை காமெடி ரோலிலும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க வைத்த பல இயக்குனர்கள் உள்ளனர். எந்த ஒரு கருத்தையும் கூட நக்கலோடு எடுத்து கூறி ரசிகர்களை சிரிக்க வைத்த சிறப்பான மனிதர்.

மேலும் செய்திகள்: 'சேது' படத்தில் விக்ரமுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இவரா? கேட்டால் ஆச்சர்யப்பட்டு போவீங்க..!
 
emotinal tweet posted by comedy actor Goundamani on his birthday

இவர் கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டர் பக்கத்தில் இணைந்த நிலையில், அவ்வப்போது... தன்னுடைய மனதில் தோன்றும் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், நேற்று இவருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை தொடர்ந்து இவருக்கு வாழ்த்தும் தெரிவித்து வந்தனர். இதில் சிலருக்கு கவுண்டமணி தன்னுடைய நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் பிரபலத்திற்கு போன் செய்து தொல்லை கொடுத்த மர்ம நபர்கள்.! சைபர் கிரைமில் பரபரப்பு புகார்!
 
emotinal tweet posted by comedy actor Goundamani on his birthday

மேலும் பிறந்தநாளை முன்னிட்டு இவர் போட்டுள்ள பதிவில்... #PSBB பள்ளியில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபர் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்று வைரலாகி வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios