Naane Varuven : நானே வருவேன் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க சுவிஸ் நாட்டை சேர்ந்த நடிகை ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
தனுஷ் - செல்வராகவன் காம்போ
தனுஷ் - செல்வராகவன் கூட்டணிக்கென கோலிவுட்டில் எப்போதுமே மவுசு உண்டு. இவர்கள் காம்போவில் வெளியான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் அமோக வரவேற்பை பெற்றன. கடந்த 11 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றாமல் இருந்த இந்த கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.
அடுத்தது நானே வருவேன்
இவர்கள் கூட்டணியில் தற்போது நானே வருவேன் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

தனுஷுக்கு ஜோடி யார்?
இந்நிலையில், நானே வருவேன் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சுவிஸ் நாட்டை சேர்ந்த எல்லி என்கிற நடிகை நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தமிழில் காஜல் அகர்வால் உடன் பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்துள்ளார். இப்படம் முடங்கிக் கிடப்பதால், நானே வருவேன் படம் தான் அவர் நடிப்பில் வெளியாகும் முதல் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
நடிகை எல்லி கடந்த 2013-ம் ஆண்டு வெளியான மிக்கி வைரஸ் என்கிற இந்தி படம் மூலம் இந்திய திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து தெலுங்கு, கன்னடம் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்து வந்த எல்லி தற்போது தனுஷின் நானே வருவேன் படம் மூலமாக கோலிவுட்டிலும் அறிமுகம் ஆக உள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... KGF 2 Trailer : RRR பட சாதனையை ஒரே நாளில் அடிச்சுதூக்கியது KGF 2 - யம்மாடியோ... ராக்கி பாய்க்கு இவ்வளவு மவுசா?
