மறைந்த காமெடி நடிகர் குமாரி முத்து, மகள் எலிசபெத் முதல் முதல் முறையாக, ட்விட்டர் பக்கத்தில் ஒரு சில வீடியோவை வெளியிட்டு, தன்னை பற்றியும், தன்னுடைய தந்தையை பற்றியும் அதிகம் பகிர்ந்து கொள்ள போவதாக, வெளியிட்ட வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

இவர் வெளியிட்டுள்ள முதல் வீடியோ ஒன்றில், தன்னை பற்றி யாருக்கும் அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் தன்னுடைய தகப்பனார், குமாரி முத்துவை அனைவருக்கும் தெரியும். நான் அவருடைய மகள் எலிசபெத் என தன்னை பற்றி சிறு அறிமுகம் கொடுத்துள்ளார்.

ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விருப்புவதாக தெரிவித்த இவர், எல்லோருக்கும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆசை எல்லோருக்கும் நிறைவேறுவதில்லை. ஆனால் எல்லோரும் வெற்றி பெறலாம் அதற்கு பொறுமையாக இருக்க வேண்டும் என தெரிவித்து. இனி அடிக்கடி உங்களை சந்தித்து பேசுவேன் என கூறினார்.

இதை தொடர்ந்து இவர் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், நம்மை நமது அப்பா அம்மாவை விட யாரும் அதிகம் நேசிக்க மாட்டார்கள். எனவே, நாம் அப்பா, அம்மா பேச்சை கேட்டு அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றும். நான் என்னுடைய அப்பாவின் பேச்சை கேட்டிருந்தால் இன்னும் நன்றாக கூட இருந்திருப்பேன் என தன்னுடைய அனுபவத்தையும் எலிசபெத் குமாரி முத்து கூறியுள்ளார். இவர் ஜனவரி மாதம் வெளியிட்ட வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. எனவே இவர் தொடர்ந்து பல வீடியோ வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கபப்டுகிறது.