TVK : தேர்தல் களத்திற்கு தயாரான தளபதி.. எலக்சன் கமிஷன் காட்டிய பச்சை கொடி - தமிழக வெற்றிக் கழகம் பராக்!

TVK Leader Vjiay : இந்த வருட துவக்கத்தில் தனது ரசிகர் பெருமக்களுக்கு தளபதி விஜய் கொடுத்த மிகப் பெரிய ட்ரீட் என்றால் அது அவருடைய அரசியல் வருகையின் அறிவிப்பு தான் என்றால் அது மிகையல்ல.

Election Commission will soon announce thalapathy vijay TVK party as state party ans

கடந்த 1992ம் ஆண்டு பிரபல இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான "நாளைய தீர்ப்பு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தனது பயணத்தை கோலிவுட் உலகில் துவங்கியவர் தான் தளபதி விஜய். கடந்த 34 ஆண்டுகளில் அவருடைய வளர்ச்சி என்பது மிகப் பெரிது என்றால் அது நிச்சயம் மிகையல்ல. 

வெகு சில ஆயிரங்களில் ஆரம்பித்த அவருடைய சம்பளம், இன்று 200 கோடி ரூபாயில் வந்து நிற்கின்றது என்றால் அதற்கு அவருடைய உழைப்பு ஒன்றே காரணம். இந்நிலையில் இந்த வருட துவக்கத்தில் தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தியாக தனது அரசியல் வருகை குறித்து அறிவித்த தளபதி விஜய், அதே நேரத்தில் தன் ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை கொடுக்கின்ற ஒரு செய்தியையும் வெளியிட்டார். 

Vairamuthu : விஜய் சேதுபதி ஒரு தனிமைத் தந்தை.. வெளியான மகாராஜா பட பாடல்.. VJSக்கு புகழாரம் சூட்டிய வைரமுத்து!

தற்பொழுது அவர் நடித்துவரும் தன் 68வது பட பணிகளை முடித்த பிறகு தன் 69 ஆவது பட பணிகளை துவங்குகிறார். அந்த பட பணிகளும் முடிந்த பிறகு, சினிமா பயணத்திற்கு குட் பை சொல்லிவிட்டு முழு நேர அரசியல்வாதியாக அவர் களம் காண உள்ளார். இந்நிலையில் எதிர்வரும் 2026ம் ஆண்டு முதல்வர் வேட்பாளராக தமிழக அரசியல் களத்தில் களமிறங்க உள்ள தளபதி விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் என்கின்ற கட்சியை தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை கடந்த பிப்ரவரி மாதம் வழங்கியது அனைவரும் அறிந்ததே. 

ஆனால் கடந்த ஐந்து மாத காலமாக, தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் விஜயின் தமிழக வெற்றிக்கழக கட்சியினை தேர்தல் ஆணையம் பதிவு செய்யாமல் நிலுவையில் வைத்திருந்தது. இதனை அடுத்து தனது கட்சியின் பொதுச் செயலாளராக புதுச்சேரியின் முன்னாள் எம்எல்ஏ ஆனந்த், பொருளாளராக வெங்கட்ரமணன் என்பவரையும், தலைமை நிர்வாக செயலாளராக ராஜசேகர் என்பவரையும் TVK தலைவர் தளபதி விஜய் நியமித்தார். 

மேலும் இந்த தகவல்கள் தற்போது தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கட்சி தொடர்பாக வேறு ஏதேனும் அச்சோப்பனைகள் இருந்தால் வருகின்ற ஜூன் மாதம் 11-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும், அவை எதுவும் வராத பட்சத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை மாநில கட்சியாக பதிவு செய்து இம்மாதத்திற்குள் தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என்கின்ற அறிவிப்பும் தற்பொழுது வெளியாகி உள்ளது.    

Kanchana 4 : காஞ்சனா 4 ரெடி.. சரி ஹீரோயின் யாரு? பாலிவுட் நடிகையை களமிறக்குகிறாரா லாரன்ஸ்? நியூ அப்டேட்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios