ektha kapoor about actress sexual harresment
ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என அனைத்து சினிமா துறையிலும் நடிகைகள் பாலியல் பிரச்சனைகளை சந்திப்பதாக அவ்வபோது செய்திகள் வெளியாகி வருகிறது. இதனை சில நடிகைகள் வெளிப்படையாகவே தங்களை தயாரிப்பாளர்கள் சிலர் படுக்கைக்கு அழைத்ததாக புகார் தெரிவித்துள்ளனர்.
தற்போது இது பற்றி பேசியுள்ள பிரபல பாலிவுட் பெண் தயாரிப்பாளர் ஏக்தா கபூர், "சில தயாரிப்பாளர்கள் நடிகைகளிடம் அப்படி நடந்துக்கொள்வது ஒருபுறமிருந்தாலும், சில நடிகைகள் வேண்டுமென்றே தயாரிப்பாளருக்கு நெருக்கமாக, படுக்கையை பகிர்ந்துக்கொள்ளும் அளவுக்கு பழகுகின்றனர்.
பின் அந்த தயாரிப்பாளர் எடுக்கும் படத்தில் வாய்ப்புக் கொடுக்காவிட்டால், பழி வாங்குவதற்காக அந்த தயாரிப்பாளர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக புகார் கூறுகின்றனர் என்று பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் இது குறித்து தெரியாமல், அனைத்து பிரச்சனைகளுக்கும் தயாரிப்பாளர் மட்டுமே காரணம் என கூறுவது முற்றிலும் தவறு என்றும் ஏக்தா கபூர் கூறியுள்ளார்.
