Asianet News TamilAsianet News Tamil

காவி சர்ச்சையால் பதான் படத்தை தடை செய்யக்கோரி போராட்டம்... ஷாருக்கானின் உருவ பொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வீர சிவாஜி அமைப்பினர் பதான் பட பாடலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான், மற்றும் நடிகை தீபிகா படுகோனேவின் உருவ பொம்மைகளை எரித்து போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Effigy of shahrukh khan and deepika padukone burnt during protest against pathaan movie
Author
First Published Dec 15, 2022, 11:57 AM IST

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் தற்போது பதான் என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஜனவரி மாதம் 25-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இதில் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெறும் பெஷாரம் ரங் என்கிற பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த பாடல் தான் தற்போது சர்ச்சையிலும் சிக்கி உள்ளது. இப்பாடல் முழுக்க விதவிதமான பிகினி உடைகளில் வந்து தீபிகா படுகோனே நடனம் ஆடுவார். அதில் ஒரு காட்சியில் மட்டும் காவி நிற பிகினி உடையில் நடனமாடி இருப்பார். அதற்கு தான் தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதையும் படியுங்கள்... புல்லட்டை தெறிக்க விடும் தீபிகா படுகோனே...ஷாருக்கான் வெளியிட்ட பதான் மோஷன் போஸ்டர்

Effigy of shahrukh khan and deepika padukone burnt during protest against pathaan movie

மத்திய பிரதேசத்தின் உள்துறை அமைச்சராக இருக்கும் நரோத்தம் மிஸ்ரா, இப்பாடலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததோடு, அதை நீக்காவிட்டால் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பதான் படத்தை புறக்கணிக்கக்கோரி பாய்காட் டிரெண்டும் வைரலானது.

Effigy of shahrukh khan and deepika padukone burnt during protest against pathaan movie

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வீர சிவாஜி அமைப்பினர் பதான் பட பாடலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான், மற்றும் நடிகை தீபிகா படுகோனேவின் உருவ பொம்மைகளை எரித்ததோடு மட்டுமின்றி சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் பெஷாரம் ரங் பாடல் உள்ளதால் அப்படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியதால் பரபரப்பு நிலவியது.

இதையும் படியுங்கள்... சர்ச்சையை கிளப்பிய தீபிகா படுகோனின் பேஷ்ரம் ரங் பாடல்… ம.பி. உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கண்டனம்!!

Follow Us:
Download App:
  • android
  • ios