பதான் படத்தில் நடிகை தீபிகா படுகோன் இடம்பெற்ற பாடலுக்கு மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். 

பதான் படத்தில் நடிகை தீபிகா படுகோன் இடம்பெற்ற பாடலுக்கு மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படத்தில் தீபிகா படுகோன் நடித்த பேஷ்ரம் ரங் என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்த நிலையில் மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவும் நடிகை தீபிகா படுகோனின் பதான் படத்தின் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: சீனாவில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மீது ‘சைபர் தாக்குதல்’: அதிர்ச்சித் தகவல்

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாடலில் காணப்பட்ட பிகினி மிகவும் ஆட்சேபனைக்குரியது. மேலும் இந்த பாடல் அசுத்தமான மனநிலையில் படமாக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. காட்சிகள் மற்றும் அவரது (திருமதி படுகோனின்) உடைகளை (பாடலில்) சரிசெய்ய வேண்டும். இல்லையெனில் இந்த படத்தை மத்திய பிரதேசத்தில் அனுமதிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்படும். ஜேஎன்யு வழக்கில் பார்த்தது போல் படுகோன் துக்டே துக்டே கும்பலின் ஆதரவாளராக இருந்துள்ளார்.

இதையும் படிங்க: ஆசை யாரை விட்டுச்சு!கிட்னி விற்பனையில் ரூ.7 கோடிக்கு ஆசைப்பட்டு ரூ.16 லட்சத்தை இழந்த மாணவி

2016 ஆம் ஆண்டு டெல்லியில் ஜேஎன்யுவில் நடந்த போராட்டத்தின் விளைவாக உருவான துக்டே-துக்டே கும்பல் என்ற கருத்தை பாஜக தலைவர்களும் வலதுசாரி குழுக்களும் அடிக்கடி பயன்படுத்துகின்றனர். ஆக்‌ஷன் த்ரில்லர் படமான பதான் ஜனவரி 25 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட பாலிவுட் திரைப்படமான ஆதிபுருஷ் தயாரிப்பாளர்களை, இந்து மதப் பிரமுகர்களை தவறான வழியில் காட்டும் காட்சிகளை அகற்றாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.