போதை மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது... வசமாக சிக்கும் நடிகர் - நடிகைகள்...!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமலாகத்துறை நடத்திய தீவிர சோதனையில், தெலுங்கு திரையுலகை சேர்ந்த உதவி இயக்குனரின் வீட்டில் இருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் மீட்கப்பட்டது.
அவர் கொடுத்த தகவலின் பேரில் பிரபல தெலுங்கு நடிகர்கள் மற்றும் நடிகைகள் போதை மருந்து பயன்படுத்தி வந்த தகவல் வெளியாகியது.
இதில் இயக்குனர் பூரி ஜெகன்நாத், நடிகர் ரவிதேஜா, தருண், நடிகைகள் முமைத்கான், சார்மி உள்ளிட்ட 12 பெருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. மேலும் போதை மருந்து உபயோகித்ததாக கூறப்படும், பிரபலங்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தடவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டது.
இந்த சோதனையின் விவரம் தற்போது நீதி மன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில் இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட நடிகர் நடிகைகள் போதை மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதைத் தொடந்து இதில் தொடர்புடைய நடிகர் நடிகைகள் மீது வழக்கு பதிவு செய்யவும், சிலரனை விசாரணைக்கு உட்படுத்தவும் அமலாக்கத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
முன்னணி நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் சிக்கியுள்ள இந்த போதை மருந்து பிரச்சனை மீண்டும் தலை தூக்கியுள்ளது, தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.