- Home
- Cinema
- சூர்யா 47 படத்துக்கு இம்புட்டு டிமாண்டா? அடேங்கப்பா... ஷூட்டிங் தொடங்கும் முன்பே இத்தனை கோடி வசூலா?
சூர்யா 47 படத்துக்கு இம்புட்டு டிமாண்டா? அடேங்கப்பா... ஷூட்டிங் தொடங்கும் முன்பே இத்தனை கோடி வசூலா?
நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படத்தை மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்க உள்ளார். இந்த நிலையில், அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் பற்றிய தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

Suriya 47 Pre Release Business
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருகிறார் சூர்யா. இவர் கைவசம் தற்போது மூன்று படங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் சூர்யா 47 திரைப்படம். இப்படத்தை ஜீத்து மாதவன் என்கிற மலையாள திரையுலகை சேர்ந்த இயக்குநர் இயக்க உள்ளார். இவர் மலையாளத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்ட ஆவேசம் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். இதுதவிர ரோமாஞ்சம், பைங்கிளி போன்ற வெற்றிப்படங்களையும் இவர் கொடுத்திருக்கிறார்.
சூர்யா 47 படத்தின் அப்டேட்
சூர்யா 47 திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்க கமிட்டாகி உள்ளார். இதுதவிர மலையாள நடிகர் நஸ்லன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைக்கிறார். மேலும் ஒளிப்பதிவாளராக உன்னி பலோட் பணியாற்றுகிறார். இப்படத்தை தான் புதிதாக தொடங்கி உள்ள ழகரம் என்கிற தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் சூர்யா. இப்படத்திற்கான பூஜை அண்மையில் நடைபெற்றது.
சூர்யா 47 பட பிசினஸ்
சூர்யாவின் சொந்த தயாரிப்பில் உருவாகும் படம் என்பதால் இதற்காக அவர் சம்பளம் எதுவும் பெறவில்லை. இப்படத்தின் தயாரிப்பு செலவு மட்டும் ரூ.22 கோடியாம். கம்மி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங்கே இன்னும் தொடங்கப்படாத நிலையில், அதன் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. அதன்படி இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.23 கோடிக்கு வாங்கி இருக்கிறதாம். படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிசல்டை பொறுத்து கூடுதல் தொகை தருவதாகவும் டீலிங் போட்டுள்ளது.
கல்லாகட்டிய சூர்யா 47
அதேபோல் சூர்யா 47 திரைப்படத்தின் ஓவர்சீஸ் உரிமையும் விற்பனை ஆகி இருக்கிறது. அதனை பர்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இதுதவிர இப்படத்தின் மியூசிக் உரிமையை திங் மியூசிக் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதன்மூலம் தற்போதே இப்படம் 75 முதல் 80 கோடி வரை வசூல் ஈட்டி உள்ளதாக கூறப்படுகிறது. ஷூட்டிங் தொடங்கும் முன்பே சூர்யா படத்திற்கு இத்தனை கோடி பிசினஸ் நடந்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. சூர்யா 47 படம் தவிர சூர்யா கைவசம் சூர்யா 46 மற்றும் கருப்பு ஆகிய படங்கள் உள்ளன. இந்த மூன்று படங்களுமே அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

