சமீப காலமாக, நடிகைகள் போல் மேக்அப் போட்டு, புகைப்படங்கள் வெளியிடுவதை இளம் பெண்கள் சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். இதில், பார்ப்பதற்கு குறிப்பிட்ட நடிகை போல் அவர்கள் இருந்தால் அவர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பார்க்கப்படும்.

அந்த வகையில் ஏற்கனவே, நடிகை சில்க் சுமிதா, நயன்தாரா, ஐஸ்வர்யா ராய் போன்று உள்ளவர்களின் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இதில் சிலருக்கு வெள்ளித்திரை படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இவர்களை தொடர்ந்து தற்போது பார்ப்பதற்கு அச்சு அசல் திரிஷா போலவே இருக்கும் பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது. ஒரு வேலை இவரும் திரைப்படங்களில் நடிக்க வரலாம் என்று எதிர்பார்க்கலாம்.

திரிஷா மஹாராணி கெட்டப்பில் வரும் மேக்அப்பில் தான் இந்த பெண், தன்னுடைய புகைப்படம் வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கு அப்படியே திரிஷா போலவும் உள்ளார். எனவே இவரை இவருடைய புகைப்படத்தை பார்த்து பலர் ஆச்சர்யப்பட்டு போகிறாரகள். 

தற்போது வைரலாகி வரும் புகைப்படம் இதோ...