துப்பாக்கி குண்டுகள் முழங்க பிறந்தநாள் கொண்டாட்டம்... களைகட்டிய எஸ்.ஜே.சூர்யாவின் பர்த்டே பார்ட்டி- வீடியோ இதோ
மார்க் ஆண்டனி படக்குழுவினர் துப்பாக்கி குண்டுகள் முழங்க எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடியுள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
அஜித்தின் வாலி திரைப்படம் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் எஸ்.ஜே.சூர்யா. இதையடுத்து குஷி, நியூ போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய அவர், ஒருகட்டத்தில் படம் இயக்குவதை நிறுத்திவிட்டு முழுநேர நடிகராக மாறிவிட்டார். மான்ஸ்டர், கடமையை செய் என ஒரு சில படங்களில் இவர் ஹீரோவாக நடித்திருந்தாலும், இவர் வில்லனாக நடித்த படங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படம் மூலம் கொடூர வில்லனாக மிரட்டிய எஸ்.ஜே.சூர்யா, அடுத்தடுத்து விஜய்யின் மெர்சல், சிம்புவின் மாநாடு, சிவகார்த்திகேயனின் டான் என படத்துக்கு படம் வித்தியாசமான வில்லனாக அதகளம் செய்து வருகிறார். இதன் காரணமாகவே இவருக்கு ஹீரோவை விட வில்லன் வாய்ப்புகள் அதிகம் வருகின்றது. அந்த வகையில் தற்போது மூன்று பிரம்மாண்ட படங்களில் வில்லனாக நடித்து வருகின்றார்.
இதையும் படியுங்கள்... சூர்யா பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் கொடுக்க உள்ள கங்குவா படக்குழு - போஸ்டருடன் வந்த அப்டேட்
அதன்படி கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ராகவா லாரன்சுக்கு வில்லனாகவும், ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரணுக்கு வில்லனாகவும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள மார்க் ஆண்டனி படத்தில் நடிகர் விஷாலுக்கு வில்லனாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதனிடையே மார்க் ஆண்டனி படக்குழுவினருடன் தன்னுடைய பிறந்தநாளை மாஸ் ஆக கொண்டாடி உள்ளார் எஸ்.ஜே.சூர்யா. மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஷால் கேக் வெட்டும் போது அங்கு ஷூட்டிங்கிற்காக பயன்படுத்தப்படும் டம்மி துப்பாக்கியை எடுத்து நடிகர் விஷால் வானத்தை நோக்கி சுடுகிறார். வில்லன் பிறந்தநாள்னா இப்படி தான் இருக்கனும் என சொல்லும் அளவுக்கு செம்ம மாஸ் ஆக கொண்டாடப்பட்ட பர்த்டே பார்ட்டி வீடியோ இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... மற்றொரு மார்பிலும் புற்றுநோய்... கசாப்பு கடையில் அறுப்பது போல் அறுத்துவிட்டனர் - கதறி அழுத நடிகை சிந்து