நடிகர் துல்கர் சல்மான், நடித்துள்ள 'குரூப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். 

மலையாள படங்கள் மட்டும் அல்லாது, தன்னுடைய தந்தையை போலவே தமிழ் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் சமீபத்தில் தமிழில் வெளியான  'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தை தொடர்ந்து தமிழ் - மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும், பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்க உள்ள 'சினாமிகா' படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமான நிலையில், தற்போது நிலவி வரும், கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார். 

இது ஒரு புறம் இருக்க, தற்போது நடிகர் துல்கர் சல்மான் நடித்து வரும் குரூப் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. போஸ்டரில் அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்க்கு மாறியுள்ளார். பாப் கட்டிங் ஹேர், அடர்த்த மீசை, கருப்பு கிளாஸ், மற்றும் கருப்பு நிற உடையில் தோன்றியுள்ளார். இந்த போஸ்டர் துல்கர் சல்மான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

இந்த படத்தை ஸ்ரீநாத்  ராஜேந்திரன் இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு சுஷின் ஷியாம் இசையமைக்க, நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஜித்தின் கே ஜோஸ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துவருகிறார். இந்த படத்தை வேய்ஃபாரர் ஃபிலிம்ஸ் மற்றும் எம் ஸ்டார் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.