I Am Game First Look Poster Released : துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஐ ஆம் கேம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் நஹாஸ் ஹிதயாத் இயக்குகிறார்.
ஐ ஆம் கேம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஐ ஆம் கேம். இந்த படத்தை இயக்குநர் நஹாஸ் ஹிதயாத் இயக்குகிறார். இந்த நிலையில் தான் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில், ஸ்டைலான மாஸ் லுக்கில் துல்கர் சல்மான் காட்சி தருகிறார். மேலும், துப்பாக்கி ஏந்திய நிலையில் கையில் ரத்தக்கறையுடன் இந்த போஸ்டரில் காணப்படுகிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையை மையபடுத்தி இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் இவரது 40ஆவது படம் என்பது குறிபிடத்தக்கது.
துல்கர் சல்மான் நடிக்கும் மலையாளப் படம்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு துல்கர் சல்மான் நடிக்கும் மலையாளப் படம் என்பதால், 'ஐ ஆம் கேம்' மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. வேஃபெரர் ஃபிலிம்ஸ் பேனரில் துல்கர் சல்மானே இப்படத்தை தயாரிக்கிறார். சஜீர் பாபா, இஸ்மாயில் அபுபக்கர், பிலால் மொய்து ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர். ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷஹபாஸ் ரஷீத் வசனம் எழுதியுள்ளனர்.
துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகர் மற்றும் இயக்குநரான மிஷ்கின், கதிர், பார்த் திவாரி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சண்டை இயக்குநர்களான அன்பறிவ் மாஸ்டர்ஸ் இப்படத்திற்கு சண்டைக் காட்சிகளை அமைக்கின்றனர். ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள ஒரு பெரிய பட்ஜெட் படமாக 'ஐ ஆம் கேம்' உருவாகிறது. RDX படத்திற்குப் பிறகு, நஹாஸ் இயக்கும் இப்படத்திலும் அன்பறிவ் மாஸ்டர்ஸ் சண்டை இயக்குநர்களாகப் பணியாற்றுகின்றனர். ஜேக்ஸ் பிஜாய் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
