பிரபல மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான். செகண்ட் ஷோ என்ற மலையாள படம் மூலம் திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார் துல்கர் சல்மான். துறு துறு சாக்லெட் பாயாக வலம் வந்த துல்கர் சல்மான் இளம் பெண்களின் கனவு நாயகன் பட்டியலில் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகரானார். 

இதையும் படிங்க: இது வேற லெவல் வெறித்தனம்... ஆக்‌ஷனில் பொறி கிளப்பிய தெலுங்கு சூப்பர் ஸ்டார்... ஒரே நாளில் யூ-டியூப்பை தெறிக்கவிட்ட "ரூலர்" டீசர்...!

"வாயை மூடி பேசவும்" என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான துல்கர் சல்மான். மாதவனுக்கு அடுத்து அழகான சாக்லெட் பாயான துல்கர் சல்மான், தமிழ் ரசிகைகளின் கனவு கண்ணனாக மாறினார். மணிரத்னம் இயக்கத்தில் "ஓ காதல் கண்மணி" படம் தமிழ் ரசிகர்களிடம் துல்கர் சல்மானை பிரபலமாக்கியது. அந்த படத்தை பார்த்த இளம் பெண்கள், நமக்கு இப்படி ஒரு லவ்வர் இருந்தால் நல்லா இருக்கும் என உருகும் வண்ணம் காதல் மன்னனாக வலம் வந்தார். அதன் பின்னர் "நடிகையர் திலகம்" படத்தில் காதல் மன்னன் ஜெமினி கணேசனாகவே உருமாறி, தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 

மலையாளத்தில் மற்றவர்களை சந்தோஷப்படுத்திவிட்டு மறைந்து போகும் மனிதனாக துல்கர் சல்மான் நடித்து அசத்திய படம் "சார்லி" . அந்தப் படம் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. எந்த நேரமும் உற்சாகத்துடனும், எதையும் பாசிடிவாகவும் எடுத்துக்கொள்ளும் துறுதுறு இளைஞனாக துல்கர் சல்மான் பட்டையை கிளப்பியிருந்தார். இப்படி தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய ரசிகைகளின் தூக்கத்தை கெடுத்த துல்கர் சல்மான். தற்போது கலக்கலான போட்டோ ஷூட் ஒன்றில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

வண்ணங்கள் இல்லாமல் பிளாக் அண்ட் ஒயிட்டில் எடுக்கப்பட்டுள்ள துல்கர் சல்மானின் மாஸ் லுக் அவரது ரசிகர், ரசிகைகளை வெகுவாக கவர்ந்துள்ளது. ஹீரோயின்களின் ஹாட் போட்டோஸ்கள் மட்டுமே லைக்குகளை அள்ளி வந்த நிலையில், துல்கர் சல்மானின் ஹேண்ட்சம் லுக் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.