கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கு இதுவரை நீண்டு கொண்டே செல்கிறது. இடையில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து கொண்டே செல்வதால் எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு பல இடங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.குறிப்பாக திரை துறையை சேர்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர்.

 

இதையும் படிங்க: கண்டவன் எல்லாம் கலாய்க்கும் நிலைக்கு கணவரால் தள்ளப்பட்ட சமந்தா... வைரலாகும் இதை பார்த்தால் புரிஞ்சுக்குவீங்க!

வசதி படைத்தவர்களை தவிர்த்து, அன்றாடம் பிழைப்பை நம்பி நடித்து வரும் துணை நடிகர்கள், மற்றும் நடுத்தர வசதி படைத்த நடிகர்கள் அன்றாட செலவிற்கு கூட அல்லாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் வறுமையில் தவிக்கும் பலரும் தங்களது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக மாற்று தொழிலை செய்து வருகின்றனர். அன்றாட பிழைப்பிற்காக நம்பியிருந்த சினிமா தொழிலும் கைவிட, எவ்வித உதவியும் கிடைக்காமல் திண்டாடும்  சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட துணை நடிகர்கள் பலரும் காய்கறி, பழம், கருவாரு என வீதி வீதியாக சென்று விற்றுவருதை நாள்தோறும் பார்த்து வருகிறோம்.

 

இதையும் படிங்க: பாவாடை, தாவணியில் சும்மா நச்சுன்னு இருக்கும் லாஸ்லியா... வைரலாகும் இலங்கை பெண்ணின் மனதை மயக்கும் அழகு...!

அப்படித்தான் கேரளாவில் நடிகை ஒருவர் ஆட்டோ ஓட்டுநராக மாறியுள்ளார். 36 வயதான மஞ்சு என்ற  அவர், கடந்த 15 வருடங்களாக நாடகத்தில் நடித்து வருகிறார். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக நாடகங்கள் எதுவும் நடத்தப்படவில்லை, படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வருமானத்திற்கு வழி தேடிய மஞ்சு, தனது கையில் இருக்கும் பணத்தை கொண்டு பழைய ஆட்டோ ஒன்றை விலைக்கு வாங்கினார். தற்போது அதற்கு தானே டிரைவராக மாறி தினமும் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.