கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கு இதுவரை நீண்டு கொண்டே செல்கிறது. இடையில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து கொண்டே செல்வதால் எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு பல இடங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.குறிப்பாக திரை துறையை சேர்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர்.

வசதி படைத்தவர்களை தவிர்த்து, அன்றாடம் பிழைப்பை நம்பி நடித்து வரும் துணை நடிகர்கள், மற்றும் நடுத்தர வசதி படைத்த நடிகர்கள் அன்றாட செலவிற்கு கூட அல்லாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் வறுமையில் தவிக்கும் பலரும் தங்களது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக மாற்று தொழிலை செய்து வருகின்றனர். அன்றாட பிழைப்பிற்காக நம்பியிருந்த சினிமா தொழிலும் கைவிட, எவ்வித உதவியும் கிடைக்காமல் திண்டாடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட துணை நடிகர்கள் பலரும் காய்கறி, பழம், கருவாரு என வீதி வீதியாக சென்று விற்றுவருதை நாள்தோறும் பார்த்து வருகின்றனர். 

கொரோனா ஒருபக்கம் நடிகர்களை இப்படி விரட்டினால் மற்றொருபுறம் வேற மாதிரியான விளைவுகளை கொடுத்து வருகிறது. அதாவது கொரோனா தாக்கத்தால் பிரபல நடிகர் ஒருவர் வாட்மேனாக மாறியுள்ளார். பிரபல கன்னட நடிகர் ஸ்ரீநாத் வசிஸ்தா ஏராளமான படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். அவர் தனது அப்பார்ட்மென்ட்டில் காவலாளியாக மாறியுள்ளார்.

 

இதையும் படிங்க: லெஸ்பியனாக நடித்த நித்யா மேனன்... சர்ச்சையை கிளப்பிய லிப் லாக் காட்சி...!

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் ஃபோட்டோவுடன் பகிர்ந்துள்ள அவர், தனது அப்பார்ட்மென்ட்டில் பணிபுரியும் பாதுகாவலர் ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளதாகவும், மற்ற பணியார்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதன் காரணமாக அவர் தற்போது பாதுகாவலராக பணிபுரிவதாகவும் , முந்தைய நாள் இரவு தனது மகன் பாதுகாவலராக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.  மேலும் இந்த பணி அவருக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். அந்த போட்டோஸ் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.