இந்நிலையில் இந்தியில் அமீர்கானுடன் குலாம் படத்தில் நடித்த நடிகர் ஜாவேத் ஹைதர் தெருவில் இறங்கி வீடு, வீடாக காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். டி.வி, சினிமாவை நம்பி வயிற்று பிழைப்பை நடத்தி வந்த இவர், பாடி காய்கறி விற்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கு இதுவரை நீண்டு கொண்டே செல்கிறது. இடையில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து கொண்டே செல்வதால் எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு பல இடங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.

குறிப்பாக திரை துறையை சேர்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். வசதி படைத்தவர்களை தவிர்த்து, அன்றாடம் பிழைப்பை நம்பி நடித்து வரும் துணை நடிகர்கள், மற்றும் நடுத்தர வசதி படைத்த நடிகர்கள் அன்றாட செலவிற்கு கூட அல்லாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் வறுமையில் தவிக்கும் பலரும் தங்களது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக மாற்று தொழிலை செய்து வருகின்றனர். கருவாடு, பழம் விற்பது, மளிகை கடை நடத்துவது என விதவிதமான வேலைகளை கையில் எடுக்க ஆரம்பித்துவிட்டனர். 

Scroll to load tweet…