dubmash mirunalini acting vijaysethupathy movie
டப்மேஷ் கலாம்:
தற்போதெல்லாம் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக் கேட்டு இயக்குனர்கள் முன்பும், தயாரிப்பாளர்கள் முன்பும் நம் நடித்து காட்டி நம் திறமையை நிரூபித்துக் காட்டும் காலம் மலையேறிவிட்டது.
வீட்டில் இருந்த படியே போனை ஆன் செய்து டப்மேஷ் செய்து அதனை வெளியிட்டாலே போதும். உண்மையாகவே உங்களுக்கு திறமை இருந்தால் சினிமா வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி இயக்குனர்களை அழைத்துவரும் என்பது மறுக்க முடியாத உண்மை.
டப்மேஷ் பிரபலங்கள்:
சமீப காலமாக டப்மேஷ் மூலம் பிரபலமான பலர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். மேலும் விராட் கோலி, டோனி, சீரியல் நடிகர்கள் திரைப்பட நடிகர் நடிகைகள் தொடர்ந்து இந்த டப்மேஷ் மூலம் பலரை கவர்ந்து வருகின்றனர்.
மிருனாளினி:

இப்படி, டப்மேஷ் மூலம் தமிழகத்தில் மிகவும் பிரபலமானவர் 'மிருனாளினி' இவர் தற்போது நகல் என்கிற படத்தில் கமிட் ஆகி கதாநாயகியாக நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் தற்போது நடிகர் விஜய் சேதுபதி, நடித்துக்கொண்டிருக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.
