ஜோக்கர் படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜு முருகனின் அடுத்த படைப்பு ஜிப்ஸி. நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் சென்சார் போர்டு தேவையில்லாமல் கைவைத்து சொதப்பிவிட்டது என்ற கருத்து நிலவிவருகிறது. இந்த படத்திற்கு நடிகரும் இயக்குநருமான நவீன் தனது பாராட்டை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: 50 இடங்களில் வெட்டினாலும்... அசால்டாக ஜெயித்த "ஜிப்ஸி"... ட்விட்டரில் குவியும் பாராட்டுக்கள்...!

அதில், வெகுநாட்கள் காத்திருப்பிற்கு பிறகு இன்று முதல் #ஜிப்ஸி #குண்டு #அசுரன் ஏற்படுத்திய சமூக தாக்கங்களை தொடரச் செய்வான். இந்த #ஜிப்ஸி எனும் நம்பிக்கையுடன் வாழ்த்துகள் தோழர்களுக்கு என ராஜு முருகன், ஜீவா, தயாரிப்பாளர் அம்பத்கர் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: "நான் எப்ப சிக்குவேன்னு பார்த்துக்கிட்டே இருக்கு"... விழா மேடையில் பிரபல பாடகியை கலாய்த்த ராதாரவி...!

தற்போது திரெளபதி படம் ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் தூள் கிளப்புவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்படத்தின் இயக்குநரான மோகன் ஜி, மூடர்கூடம் இயக்குநர் நவீனை லேசாக சீண்டிபார்த்துள்ளார். அதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் திரெளபதி படம் குறித்த உங்களது வாழ்த்திற்காக வெயிட்டிங் என ட்வீட் செய்திருந்தார். ஆனால் அதற்கு நவீன் இதுவரை பதிலளிக்கவில்லை. 

இதையும் படிங்க: "நான் எப்ப சிக்குவேன்னு பார்த்துக்கிட்டே இருக்கு"... விழா மேடையில் பிரபல பாடகியை கலாய்த்த ராதாரவி...!

ஆனால் ஜிப்ஸி படத்திற்கு நவீன் சொன்ன வாழ்த்து திரெளபதி ஆதரவாளர்களை வெறிப்பேத்தி விட்டது போல. என்ன பாய் ரொம்ப நாளாக டுவிட்டர் பக்கத்தில் ஆளையே காணோம். திரெளபதி படம் குறித்த உங்களது கருத்து என்ன என கேள்வி மேல் கேள்வி கேட்டு வாண்டடாக சண்டைக்கு அழைத்துள்ளனர்.