குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய ராஜு முருகனின் அடுத்த படைப்பு ஜிப்ஸி. ஜீவா, நடாஷா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். காஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டில் பெற்றோரை இழந்த குழந்தை, நாடோடி  ஒருவரால் வளர்க்கப்படுகிறான். காலப்போக்கில் அவரும் இறந்து போக தனிந்து விடப்படும் ஜிப்ஸி (ஜீவா) நாகூரில் கட்டுப்பாடான முஸ்லிம் குடும்பத்தில் வளர்ந்த இஸ்லாமிய பெண்ணால் காதலிக்கப்படுகிறான். இருவரும் வடமாநிலத்திற்கு சென்று திருமணம் செய்து கொள்கின்றனர். அங்கு நடக்கும் கலவரம் ஒன்றில் இருவரும் பிரிய, பிரிந்தவர்கள் சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை. 

இதையும் படிங்க: "நான் எப்ப சிக்குவேன்னு பார்த்துக்கிட்டே இருக்கு"... விழா மேடையில் பிரபல பாடகியை கலாய்த்த ராதாரவி...!

ஜீவா, நடாஷா சிங் காதல் தான் கதை என்றாலும், கலவரமும் அதனால் சின்னபின்னாமாகும் எளிய மக்களின் வாழ்க்கையும் தான் படத்தின் உயிரோட்டம். சிஏஏ போராட்டத்திற்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டங்கள் கலவரமாக மாற்றப்பட்டு வரும் இந்த சூழலில், ஜிப்ஸி படம் பேசியுள்ள அரசியல் அனைவரையும் ஈர்த்துள்ளது. சென்சார் போர்டால் 50 இடங்களில் வெட்டப்பட்டு, ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்ட போதும் படம் ரசிகர்களால் வரவேற்பை பெற்றுள்ளது. 

படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பாராட்டுவது நடிகர் ஜீவாவை தான். நீண்ட நாட்களாக வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்த ஜீவாவிற்கு இந்த படம் சிறப்பான திருப்புமுனையாக அமைத்திருக்கிறது. காதல் காட்சிகளிலும், ஜிப்ஸியாகவும் ஜீவா வாழ்ந்திருப்பதாக நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். 

இந்தியா முழுவதும் டிராவல் செய்த அனுபவத்தை ஜிப்ஸி திரைப்படம் கொடுத்துள்ளதாகவும், சரியான நேரத்தில் சரியான படத்தை இயக்குநர் ராஜு முருகன் கொடுத்துள்ளதாகவும் ட்விட்டர் கமெண்ட்ஸ் தெறிக்கிறது. 

இதையும் படிங்க: ரஜினி கிட்ட காசு வாங்கிட்டியா?... சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!

இதைத்தவிர கேமராவும், இசையும் படத்திற்கு மிக்க பலம் சேர்த்திருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சிலரோ காதல் காட்சிகள் திருப்பதியாக இல்லை என்றும், அதிகப்படியான சீன்கள் கட் செய்யப்பட்டதால் படத்தை முழுமையாக உள்வாங்க முடியவில்லை என்றும் பதிவிட்டுள்ளனர்.