Asianet News TamilAsianet News Tamil

52வது தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகை ஆஷா பாரிக்! வீடியோ

திரைத்துறையில் பன்முக திறமையாளராக விளங்கும் நடிகை ஆஷா பாரிக்கிற்க்கு 52 ஆவது  தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நடந்த தேசிய விருது விழாவில் இவருக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது.
 

DraupadiMurmu presented Dadasaheb Phalke Award to well-known actress Asha Parekh
Author
First Published Sep 30, 2022, 7:49 PM IST

தென்னிந்திய சினிமாவில், சாதனையாளர்களாக அடையாளம் காணப்படும் திரை பிரபலங்களுக்கு ஆண்டு தோறும், மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1969ம் ஆண்டு முதல் முதல் வழங்கப்படும் இந்த விருதை, தென்னிந்திய திரையுலகை சேர்ந்த அமிதாப் பச்சன், சத்யஜித் ரே, ராஜ் கபூர், ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், கே.பாலச்சந்தர் போன்ற பலர் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் 52வது தாதா சாகேப் பால்கே' விருதினை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்தார். அதில் இந்த ஆண்டுக்கான  தாதா சாகேப் பால்கே விருது , இந்திய திரைத்துறையில், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகை, என பன்முக திறமையாளராக விளங்கும், மூத்த நடிகை ஆஷா பாரிக்கிற்க்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து, இன்று நடைபெற்ற 68 ஆவது தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லிலில் நடைபெற்ற நிலையில், 79 வயதான நடிகை ஆஷா பாரிக், குடியரசு தலைவர் கையால் இந்த விருதினை பெற்றுக்கொண்டார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மாடுகளோ ஆஷா பாரிக், "தில் தேகே தேகோ", "கடி படங்", "தீஸ்ரி மன்சில்" மற்றும் "கேரவன்" போன்ற படங்கள் மூலம் மிகவும் பிரபலமானவர். மேலும் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow Us:
Download App:
  • android
  • ios