DR.Simbu speech : செய்தியாளர் சந்திப்பில் பேசிய சிம்பு,..தன்னை சிறு வயதிலிருந்து திறைமையாளனாக வளர்த்த தன தாய், தந்தைக்கே இந்த எல்லா புகழும் சேரும் என்றும்.. இவர்கள் போன்ற பெற்றோர் அடுத்த ஜென்மத்துல கிடைப்பாங்களான்னு தெரிவில்லை.. இவ்வாறு உருக்கமாக பேசியுள்ளார்.
டி.ராஜேந்தரின் மகனான சிம்பு, சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். தன் தந்தையை போலவே நடிப்பு, இசை, இயக்கம், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கி வரும் சிம்பு, தனது கடின உழைப்பால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உயர்ந்துள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு பின் குறிப்பிடத்தக்க வெற்றியை கொடுக்க முடியாமல் தவித்து வந்த சிம்புவுக்கு, சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.
இப்படம் மூலம் சுமார் 11 ஆண்டுகளுக்கு பின் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்துள்ள சிம்புவுக்கு, தற்போது கோலிவுட்டில் மார்க்கெட் அதிகரித்துள்ளது. தற்போது கவுதம் மேனனின் வெந்து தணிந்தது காடு, கோகுல் இயக்கும் கொரோனா குமார், ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் சிம்பு.

இந்நிலையில் திரைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக சிம்புவுக்கு இன்று வேல்ஸ் யுனிவர்சிட்டியின் நிறுவனர் ஐசரி கணேஷ் தலைமையில் நடைபெற்ற விழாவில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. நடிகர் சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை ஐசரி கணேஷ் தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய சிம்பு,..தன்னை சிறு வயதிலிருந்து திறைமையாளனாக வளர்த்த தன தாய், தந்தைக்கே இந்த எல்லா புகழும் சேரும் என்றும்.. இவர்கள் போன்ற பெற்றோர் அடுத்த ஜென்மத்துல கிடைப்பாங்களான்னு தெரிவில்லை.. இவ்வாறு உருக்கமாக பேசியுள்ளார்.
