'லியோ' திரைப்படத்தை இலங்கையில் அக்டோபர் 20 ஆம் தேதி, வெளியிட வேண்டாம் என இலங்கையை சேர்ந்த தமிழ் எம்பிக்கள் தளபதி விஜய்க்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.
தளபதி விஜய் நடிப்பில், மாஸான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது லியோ. இந்த படம், அக்டோபர் 19-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஆனால் இலங்கையில் வரும் 20 ஆம் தேதி ஹர்த்தால் கடைபிடிக்க உள்ளதால் இப்படத்தை வெளியிட வேண்டாம் என இலங்கை தமிழ் எம்பிக்கள் கடிதம் மூலம் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து வெளியாகியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, "ஜோசப் விஜய் அவர்களுக்கு தங்களது 'லியோ' திரைப்படம் இம்மாதம் 19 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகின்றது. இலங்கையில் வெளியிடவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தங்களது நடிப்பில் உருவாகும் திரைப்படங்களை ஈழத் தமிழர்கள் பார்த்து மகிழ்கிறார்கள். அதேவேளை இலட்சக்கணக்கான ஈழ தமிழர்கள் உங்களின் ரசிகர்களாகவும் இருக்கிறார்கள்.

'லியோ' படத்தை சட்டவிரோதமாக வெளியிட 1246 இணையதளங்களுக்கு தடை! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
அண்மையில் முல்லைதீவு மாவட்ட நீதிபதி சரவணன் ராஜா அவர்கள் மீதான, ஸ்ரீலங்கா அரசின் அழுத்தங்களினாலும், உயிர் அச்சுறுத்தலினாலும் அவர் தனது பதவியை துறந்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி உள்ளார். அதற்கு நீதி கோரி பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இம்மாதம் 20ஆம் தேதி வடக்கு கிழக்கில் ஹர்த்தால் கடைபிடிக்க தீர்மானித்துள்ளோம்.

Jyothika About Suriya: தல தோனியை பீட் பண்ணிடீங்க சூர்யா..! ஆனந்த கண்ணீருடன் எமோஷ்னலாக பேசிய ஜோதிகா.!
இந்நாளில் தங்களது திரைப்படம் வெளியே வெளிவருவது எங்களது போராட்டத்திற்கு பின்னடைவாக இருக்கின்றது. அத்துடன் அது ஈழத் தமிழர்களை அவமதிக்கும் செயல்பாடாகவே இருக்கும். ஈழத் தமிழர்களுக்கும், உங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் இருப்பதாலும், பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உங்களுக்கு இருக்கிறார்கள் என்பதாலும், லியோ திரைப்படக் காட்சிகளை இம்மாதம் 20ஆம் தேதி ஸ்ரீலங்காவில் நிறுத்தி வைக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம். என இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் நடிகர் விஜய்யிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
