Asianet News TamilAsianet News Tamil

Ajithkumar : தல என்று என்னை அழைக்க வேண்டாம்..! இப்படி அழைத்தால் போதும் அஜித் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தல அஜித் நடித்துள்ள, வலிமை படம் வெளியாக உள்ள நிலையில்... அஜித் தன்னுடைய தல என்கிற பட்டத்தை துறந்துள்ளார்.

 

Dont call thala ajith sensational statement
Author
Chennai, First Published Dec 1, 2021, 3:15 PM IST

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தல அஜித் நடித்துள்ள, வலிமை படம் வெளியாக உள்ள நிலையில்... அஜித் தன்னுடைய தல என்கிற பட்டத்தை துறந்துள்ளார்.

தல அஜித்துக்கு கோலிவுட் திரையுலகில் எவ்வளவு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர் என்பது, அனைவருமே அறிந்தது தான். இவரது லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானால் முதலில் அதனை வைரலாக்கி விட்டு தான் தல ரசிகர்களுக்கு அடுத்த வேலை. இந்நிலையில் அஜித் தற்போது, தல என்று தன்னை யாரும் அழைக்க வேண்டாம் என வெளியிட்டுள்ள அறிக்கை திரையுலகிலும், அஜித் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dont call thala ajith sensational statement

திரையுலகில் இருக்கும் நடிகர் தங்களுடைய பெயருக்கு முன்னாள் சில பட்டங்களை சேர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரில் துவங்கி, தற்போதைய இளம் நடிகர்களை வரை அதனை விரும்புகிறார்கள். அது அவர்களுக்கு ரசிகர்களால் கொடுக்கப்படும் சிறப்பு அந்தஸ்தாகவும் பார்க்கப்படுகிறது.

அப்படி ஏற்கனவே கொடுக்கப்பட்ட அல்டிமேட் ஸ்டார் என்கிற பட்டத்தை துறந்த அஜித் தற்போது தல என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வந்த பட்டத்தையும் துறந்துள்ளதாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

Dont call thala ajith sensational statement

இதுகுறித்து, அஜித்தின் மேலாளர், சுரேஷ் சந்திரா தன்னுடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...  

"பெரும் மரியாதைக்குரிய ஊடக பொதுஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனிவரும் காலங்களில் என்னை பற்றி எழுதும்போதோ, என்னை பற்றி குறிப்பிட்டுப் பேசும் போதோ என் இயற்பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோஅல்லது ஏகே என்று குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ, வேறு ஏதாவது பட்டப் பெயர்களையும் குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மனநிறைவு, உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன். அன்புடன் அஜித் குமார் என தெரிவித்துள்ளார்.

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios