doctor rajasekar daugther pair with vishnu vishal
டாக்டர் ராஜசேகர்
1984 ம் ஆண்டு தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் ”புதுமைப்பெண்” என்ற படத்தில் வில்லனாக அறிமுகவானவர் டாக்டர் .ராஜசேகர். இவர் தெலுங்கு முக்கிய நடிகராக அறியப்படுகிறார்.அவர் தெலுங்கில் நடித்த அங்குசம் படம் தமிழில் இதுதாண்டா போலிஸ் என டப்பிங் ஆகி மாபெரும் வெற்றி பெற்றது. இவரது காதல் மனைவி ஜீவிதா வளைகாப்பு என்ற படம் மூலம் தமிழில் அறிமுகவானவர்.

தமிழில் ஷிவானி
டாக்டர் ராஜசேகர் ஜீவிதா தம்பதியினருக்கு இரண்டு மகள்கள்.முதல் மகள் ஷிவானி டாக்டருக்கு படித்து வருகிறார்.இந்நிலையில் இவர் சில நாட்களுக்கு முன்பே நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாயின.இதற்காக ஷிவானி போட்டோ ஷூட் ஒன்றையும் நடத்தி அவருடைய பல புகைப்படங்கள் முன்னணி இயக்குநர்களின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. தற்போது தெலுங்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதைத் தொடர்ந்து தற்போது தமிழிலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஷ்ணு விஷால்
அறிமுக இயக்குநர் வெங்கடேஷ் இயக்கத்தில் ஷிவானி தமிழில் நடிகையாக அறிமுகவாகவுள்ளார். இந்த படத்தில் ஷிவானிக்கு ஜோடியாக விஷ்ணு விஷால் நடிக்கிறார். குறிப்பாக இந்த படத்தின் மூலம் பின்னணி பாடகர் கிரிஷ் இசையமைப்பாளராக அறிமுகவாகவுள்ளார். இப்படத்திற்கான அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

தயாரிப்பு
இந்த படத்தை நடிகர் விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். இதுகுறித்து நடிகர் விஷ்ணு விஷால் தமது டிவிட்டர் பக்கத்தில், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் நாயகியாக அறிமுகவாகவுள்ள ஷிவானி ராஜசேகரை வரவேற்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
