'கோலமாவு கோகிலா' பட இயக்குனர் நெல்சன் திலீப் குமார், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கியுள்ள 'டாக்டர்' படத்தில் இருந்து, மார்ச் மாதம் வெளியாக உள்ள நிலையில், நேற்று இந்த படத்தில் இருந்து so  baby  பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் செய்திகள்: 40 வயது இயக்குனருடன் ரகசிய டேட்டிங்..! காதல் சர்ச்சையில் சிக்கிய சிவகார்த்திகேயன் ஹீரோயின்!
 

சமீபத்தில் 'டாக்டர்' திரைப்படம், மார்ச் 26 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அடுத்தடுத்து இந்த படம் குறித்த பல தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில், so baby’ பாடலை நேற்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தாலும்,  பின்னர் 7 மணிக்கு தான் வெளியிட்டனர். சற்று தாமதமாக வந்தாலும் கெத்து காட்டியுள்ளது so baby .

அனிருத் இசை அமைத்துள்ள, இந்த பாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகமாகியுள்ளார், நடிகை பிரியங்கா அருள் மோகன். இந்த படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ள 'டான்' படத்திலும் பிரியங்கவே நாயகியாக நடிக்கிறார்.

மேலும் செய்திகள்: ஆஸ்கர் போட்டியில் நீடிக்கும் 'சூரரை போற்று'! உற்சாகத்தில் ரசிகர்கள்!
 

மேலும் செய்திகள்: ஸ்லீவ் லெஸ் உடையில் ஹீரோயின்களையே தூக்கியடிக்கும் அனிகா! குட்டி நயன்தாரான சும்மாவா?
 

'டாக்டர்' திரைப்படத்தை,  சிவகார்த்திகேயனின் SK புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ளார். இணைத்தயாரிப்பாளராக கலை அரசு படத்தை தயாரித்துள்ளார். ஏற்கனவே வெளியான 'செல்லமா செல்லமா' பாடல் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில், இந்த பாடல் வெளியான 24 மணிநேரத்திற்குள், சுமார் 3 மில்லியன் பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.